- Error
-
- RSF_WARNING_HELPER_MISSING
இலங்கையின் 74வது சுதந்திர தினச் செய்தி மாண்புமிகு ஹர்ஷ குமார நவரத்ன
இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகின்றோம். மகத்தான தியாகங்களைச் செய்து இந்த சேவையை ஆற்றிய எமது முன்னணி சுகாதார வீரர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பின் மூலம், கோவிட்-19 இன் சவால்களை எதிர்கொண்டு, அதன் அச்சுறுத்தலைக் கணிசமாக முறியடித்து, எமது கொண்டாட்டம் நடாத்தப்படுவது சுவாரஸ்யமானது. அவர்களின் மகத்தான மற்றும் பாராட்டத்தக்க சேவைக்காக நான் அவர்களை வாழ்த்துகின்றேன்.
கோவிட்-19 தொற்றுநோய் இன்னும் நீடிப்பதால், உலகம் இன்னும் அதன் சமூகங்களுக்குள் முன்னோடியில்லாத நெருக்கடியை எதிர்கொள்கின்ற அதே வேளையில், அதன் மருத்துவ, சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கின்றன. இலங்கையில் எமக்கு அது அவ்வாறன்றி மாற்றமுடையதாக இல்லை. வரலாற்று ரீதியாக, ஒரு தேசமாகவும் தைரியமான மக்களாகவும் நாங்கள் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளோம், பல சவால்களை சமாளித்துள்ளோம், அதே வீரியத்துடனும் புரிதலுடனும் தற்போதைய சிரமங்களை சமாளிப்போம்.
கனடாவுடனான நீண்டகால இருதரப்பு உறவையும் நட்புறவையும் பாராட்டுவதற்கு இலங்கை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றது. எமது இராஜதந்திர உறவு 1958 இல் நிறுவப்பட்டதுடன், அப்போது முதல் வலுவாகவும், நல்லுறவுடனும் இன்றுவரை அது தொடர்கின்றது. 63 ஆண்டுகளுக்கும் மேலான எமது உறவு மற்றும் கூட்டாண்மை பொதுநலவாய மதிப்புக்கள், ஜனநாயக விதிமுறைகள் மற்றும் பலதரப்பு மன்றங்களிலான ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் பரஸ்பர நன்மையை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அபிவிருத்தித் திணைக்களத்துடனான எனது முதல் சில சந்திப்புக்களில், பரஸ்பரம் ஆர்வமுள்ள மற்றும் இரு நாடுகளுக்கும் நன்மைகளை வழங்கும் வாய்ப்புக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைந்தோம். இந்தோ பசுபிக் மூலோபாயத்தில் கனடா அர்ப்பணிப்புடன் இருப்பதால், புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் மையப் புள்ளியாக இலங்கையின் வகிபாகத்தையும் நாங்கள் கலந்துரையாடினோம். தெற்காசிய மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதிக்குப் பங்களிக்கும் இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் நல்லிணக்கச் செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடலைத் தொடர பல்வேறு குழுக்களையும் பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதற்கு கனடா ஒரு ஊக்கியாக இருப்பதையும் நாங்கள் முன்மொழிந்தோம்.
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகையில் அதிதேகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பின்வருமாறு அறிவித்தார்:
'கடந்த அரை நூற்றாண்டில் இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்கள் மற்றும் பல தசாப்த கால செழிப்புக்களை வன்முறைகள் கொள்ளையடித்தன. இதுபோன்ற வன்முறைகள் இலங்கையில் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதில் எனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. எனவே இதன் பின்னணியில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதிகமான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் மூலம் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை வளர்ப்பது நீடித்த அமைதியை அடைந்து கொள்வதற்கு இன்றியமையாததாகும். பொருளாதார அபிவிருத்தியின் பலன்களில் அதிக சமமான பங்களிப்பை உறுதி செய்கின்றது.
இனம், மதம் அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான, நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புவது எனது அரசாங்கத்தின் உறுதியான நோக்கமாகும். இந்தச் செயற்பாட்டில் அனைத்து உள்நாட்டுப் பங்குதாரர்களுடனும் ஈடுபடவும், எமது சர்வதேசப் பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவைப் பெறவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.'
இங்கே கனடாவில், ஒட்டாவா மற்றும் டொரண்டோவில் உள்ள எமது இரு அலுவலகங்களாலும் வழங்கப்படும் சேவைகளின் மூலம், எமது உயர்ஸ்தானிகராலயம் அதிமேதகு ஜனாதிபதியின் அமைதி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதற்கு அர்ப்பணிக்கப்படும். இன்று, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தினத்தில், இலங்கை மக்களின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவரையும் இந்த விடயம் தொடர்பில் என்னைப் பார்வையிடவும், சந்தித்து உரையாடவும், எனது அரசாங்கத்தின் சார்பாக நான் அழைக்க விரும்புகின்றேன். சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான பல சிறந்த நடைமுறைகள், ஒத்த எண்ணம் கொண்டவர்கள் சந்தித்து தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் தொடங்குகின்றன. நடைமுறையில் உள்ள சிக்கல்களைத் திறப்பதானது மீண்டும் மீண்டும் சந்திப்பதற்கும், ஒன்றாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளைத் தேடுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் மெதுவாக நம்பிக்கையை உருவாக்குவதற்கும் முயற்சி செய்கின்றேன். அவ்வாறு செய்வதன் மூலம், நாங்கள் ஒத்துழைக்கக்கூடிய மற்றும் உறவுகளை கட்டியெழுப்பக்கூடிய பகுதிகளைத் தொடர்ந்தும் கண்டுபிடித்து வருகின்றோம். மீண்டும், முக்கிய பங்குதாரர் சமூகங்களுடன் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை நான் முன்மொழிகின்றேன், மேலும் எமது அமைதி மற்றும் நல்லிணக்க முயற்சியின் நேர்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். தைப் பொங்கல் பண்டிகைக்கான எனது வாழ்த்துக்களை மீண்டும் குறிப்பிடுகிறேன்: 'இலங்கை, பல்லாண்டுகளாக பல இன மற்றும் பன்முகக் கலாச்சார சமூகமாக, தைப் பொங்கலை முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடுவதைக் கூட்டாக வளர்த்து வருகின்றது: கனேடிய தமிழ் சமூகத்திற்கு அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை விரும்புவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.'
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடியர்கள், குறிப்பாக இலங்கை - கனடா சங்கங்கள், தேசிய மற்றும் சர்வதேச மன்றங்களில் அவர்களது தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் மற்றும் பிரதிநிதித்துவங்களுக்காக நாங்கள் அங்கீகரிக்கின்றோம். சமாதானம் மற்றும் நல்லிணக்க முன்முயற்சிகள் தொடர்பான பணிகளை நீங்கள் கூட்டாக ஆதரித்து, ஒத்துழைத்து, ஈடுபடும்போது, தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் சிங்களவர் ஆகிய உங்களது ஒவ்வொரு இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதும் அவசியமாகும்.
எனது நற்சான்றிதழ்களைக் கையளிக்கும் விழாவில், 'நாங்கள் அனைவரும் எல்லைகளைத் தாண்டி பணியாற்றுகின்றோம். எம்மைப் பிளவுபடுத்துவதை ஒதுக்கி வைத்துவிட்டு, எமது பொதுவான மனிதநேயத்தில் கவனம் செலுத்தும்போது, நாம் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்' என ஆளுநர் நாயகம் எங்களிடம் குறிப்பிட்டார். நான் அவரை நேரில் சந்தித்தபோது, கனடாவின் உண்மை ஆணைக்குழுவின் அனுபவத்திலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினார். இதுதவிர, ஆணைக்குழுவில் ஈடுபட்டிருந்த ஒரு முன்னணி பிரமுகர் எனக்கு அறிமுகமானார். எமது உயர்ஸ்தானிகராலயம் அவரது தலையீடு மற்றும் ஆலோசனையை மிகவும் பாராட்டுவதுடன், அதை பின்பற்றுவதாக உறுதியளிக்கின்றது.
சாத்தியமான வர்த்தகம், முதலீடு மற்றும் வணிகம் மற்றும் வணிக உரையாடல் குறித்து இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் எமது தூதரகம் பல சந்திப்புக்களை நடாத்தியது. அத்தகைய சந்திப்புகளின் தொடர்ச்சியாக, வெற்றிகரமான வணிகக் கூட்டாண்மைகளை இறுதிசெய்வதற்காக கனேடிய வணிக அறைகள் மற்றும் ஆர்வமுள்ள வணிக நிறுவனங்களுடன் நாம் தொடர்பில் இருக்கின்றோம்.
கனேடியப் பல்கலைக்கழகங்களில் நூற்றுக்கணக்கான இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வருவதுடன், இலங்கைப் பல்கலைக்கழகங்களுடன் சாத்தியமான ஒத்துழைப்பைத் தொடங்குவதற்கு அந்த பல்கலைக்கழகங்களில் சிலவற்றுடன் இணைந்து பணியாற்றுவதே எமது நோக்கமாகும். சுவாரஸ்யமாக, எங்கள் சுகாதார ஊழியர்கள் கனேடிய சுகாதார அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், மேலும் ஒரு ஆப்போர்டனை திறப்பது குறித்து இருதரப்பு புரிதலை ஏற்படுத்த கனேடிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
2018 இல், கனடாவில் இருந்து 50,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றது. கோவிட்-19 இன் பரவலை முறியடிப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுடன், தடுப்பூசிகளை விரைவாக ஏற்றுவதன் மூலம், இலங்கை தற்போது தெற்காசியாவில் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. எமது தூதரகமானது கனேடிய பயண நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள நபர்களுடன் இணைந்து சுற்றுலாவை மிகவும் பயனுள்ள முறையில் ஊக்குவிக்கும்.
எதிர்வரும் ஆண்டில், இலங்கைக்கும் கனடாவுக்கும் பல வாய்ப்புக்களைத் திறந்து, புதிய முயற்சிகளை உருவாக்கி, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்தி, வலுவான ஒற்றுமையை அனுபவிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
நன்றி